ரூபாய் நோட்டுகளில் நேதாஜியின் உருவப்படம் கோரிய வழக்கு : உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த விளக்கம்..!!
Author: Babu Lakshmanan10 August 2021, 5:57 pm
ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை அச்சடிக்கக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியை கவுரவப்படுத்தும் விதமாக, அவரது உருவப்படத்தை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டு வருகிறது. காந்தியைப் போலவே, மற்றொரு சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தையும் ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்க மத்திய அரசுக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது-
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மகாத்மா காந்தியை தவிர வேறு இந்திய தலைவர்களின் புகைப்படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சடித்தால் அவர்கள் மீது மதம் மற்றும் சாதி ரீதியாக சாயம் பூசப்படும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
ஏற்கனவே, இதே கோரிக்கையை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிடப்பட்ட நிலையில், அதனை மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
0
0