ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு முதல் போட்டி.. சாதனைக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan10 September 2025, 4:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் 17-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் ’ஏ’ மற்றும் ’பி’ என இரு பிரிவுகளில், ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
நேற்று நடந்து முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இதில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 188 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்த நிலையில் இன்று இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது. இப்போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணியில், சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சா்மா, திலக் வா்மா, ஹா்திக் பாண்டியா, ஜிதேஷ் சா்மா (வி.கீ.), ஷிவம் துபே, அக்ஸா் படேல், ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங், வருண் சக்கரவா்த்தி, குல்தீப் யாதவ், ஹா்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோர் உள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரக அணியில், முகமது வசீம் (கேப்டன்), அலிஷான் ஷராஃபு, ஆா்யன்ஷ் சா்மா, ஆசிஃப் கான், துருவ் பிராசா், ஈதன் டிசௌஸா, ஹைதா் அலி, ஹா்ஷித் கௌஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முகமது ஃபரூக், முகமது ஜவாதுல்லா, முகமது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் கான், சிம்ரன்ஜீத் சிங், சாகிா் கான் ஆகியோர் உள்ளனர். இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது
