திருவள்ளூர் ஆட்சியரின் போட்டோ வைத்து நூதன மோசடி : வாட்ஸ் அப் எண் மூலம் அமேசான் கூப்பன் கேட்ட மர்மநபர்… போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2022, 9:56 pm

திருவள்ளூர் : ஆட்சியரின் படம் வைத்த செல்போன் வாட்ஸ்அப் எண் மூலம் அரசு அதிகாரிகள் பலரிடம் அமேசான் கூப்பன் கேட்ட மர்ம நபர் குறித்து ஆட்சியரின் புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களின் புகைப்படம் வைத்து
செல்போன் வாட்ஸ் அப் எண்ணில் மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்செய்தி அனுப்பி அமேசான் கூப்பன்களை கேட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் காவல்துறையினர் உத்தரவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வாட்ஸ்அப் எண் மூலம் மாவட்ட ஆட்சியர் புகைப்படத்தை வைத்து கூப்பன் வசூல் செய்த நபர் யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?