வீடு தேடி வரும் பரிசு! Scratch Card வைத்து நூதன மோசடி!!

9 September 2020, 12:36 pm
Fraud- updatenews360
Quick Share

மதுரை : உங்கள் பெயருக்கு கார் பரிசு என வீடு தேடி வரும் ஸ்கிராட் கார்டு மூலம் நூதன மோசடி செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் பெயருக்கு கார் பரிசு என ரிஜிஸ்டர் தபாலில் கூப்பன் – ஆதார் கார்டு எண், பான் கார்டு எண் அனுப்பினால் கார் உடனே உங்களுக்கு என தொழில் அதிபர்களை குறி வைத்து நடக்கும் நூதன மோசடி .

தமிழகம் முழுவதும் 15 இடங்களில் நான்கு சக்கர வாகன டயர் டீலராக இருப்பவர் பழனிகுமார் சுவாமி.
மேற்குவங்காளத்தில் உள்ள நாப்டால் கம்பெனியில் இருந்து பழனிகுமார் சுவாமி என்ற பெயருக்கு தபால் ஒன்று வந்தது.

அதை பிரித்து பார்த்ததில் அதில் ஏடிஎம் கார்டு போன்று ஒரு ஸ்கிராச் கார்டு இருந்தது. அதை சுரண்டினால் அதில் தெரியும் பரிசு உங்களுக்கு காத்திருக்கிறது என அதில் பிரிண்ட் போட்டு இருந்தது.

இதை அடுத்து அதை கிராச் செய்து பார்த்தபோது உங்கள் பெயரில் 10 லட்சம் மதிப்பிலான மகேந்திரா XUV500 கார் பரிசு விழுந்திருப்பதாகவும்,அந்த கூப்பனில் உள்ள ரகசிய எண்னை இதில் குறிப்பிட்டுள்ள வாட்ஸ் அப் எண்னுக்கு அனுப்பவும், மேலும் உங்களது ஆதார் கார்டு எண், பான் கார்டு எண்ணையும் தாங்கள் குறிப்பிட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணிற்கு உடனடியாக போட்டோ எடுத்து அனுப்பவும், என குறிப்பிட்டு இருந்தது.

அதோடு இந்த ஆபர் 30 நாட்கள் மட்டுமே என குறிப்பிட்டு இருந்தனர், இது மோசடி என புரிந்து கொண்ட பழனிகுமார் சுவாமி எந்த தகவலையும் அனுப்பவில்லை ஆனால் பலர் ஆசையில் வெறும் ஆதார் கார்டு எண், பான் கார்டு எண்ணையும் தானே கேட்கிறார்கள் என அனுப்பிவிடுவார்கள்.

விளைவு , இவரை பற்றி முழு விபரங்களையும் எடுத்து வங்கி பணத்தையும் எடுத்து விடுவார்கள் மோசடி கும்பல் என்பது பலருக்கு புரியவில்லை. மேலும் இது போன்ற தொழில் அதிபர்களை குறிவைத்து வடநாட்டு மோசடி கும்பல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இது போன்ற ஆசை கூப்பன்களை நம்பி ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 7

0

0