தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : மீட்புப் பணிகள் தீவிரம்..!!

13 January 2021, 11:02 am
1nellai flood - updatenews360
Quick Share

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் உள்ள தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை நீடித்துவரும் நிலையில் தாமிரபரணியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து வண்ணாரப்பேட்டை, குறுக்குத்துரை உள்ளிட்ட தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கால்நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்புப் பணியில் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவின் இரண்டு பிரிவுகள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 25 வீரர்கள் உள்ளனர்.

வெள்ள அபாயப் பகுதிகளில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தாமிரபரணி கரையோரத்தை ஒட்டி 87 தாழ்வானப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆலடியூர் என்ற இடத்தில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த முகாமில் 8 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Views: - 5

0

0