அதிகாலை முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவை : நிம்மதி அடைந்த பொதுமக்கள்..!

7 September 2020, 8:41 am
Quick Share

தமிழகத்தில் 166 நாட்களுக்கு பிறகு மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இன்று அதிகாலை முதல் தொடங்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவைக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் 4ஆம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி இ.பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்தது.

இந்த சூழலில், மாவட்டங்களுக்குளாக பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை முன்வைத்தனர்.

இதன் அடிப்படையில் வழி காட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்களுக்கு இடையே செப்-7 ஆம் தேதிமுதல் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கி கடந்த 2ஆம் தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் 166 நாட்களுக்கு பிறகு மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து அதிகாலை முதல் தொடங்கியுள்ளது.

மேலும் பயணம் செய்ய விரும்புவோர், www.tnstc.in என்ற இணையதளத்தின் வழியாகவும், tnstc என்னும் மொபைல் ஆப் வழியாகவும் முன்பதிவு செய்யலாம்.

மாநிலம் முழுவதும் உள்ள எஸ்இடிசி முன்பதிவு மையங்களுக்கு சென்று நேரடியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில், ஏ.சி பஸ் சேவை மட்டும் கிடையாது. ஒரு பஸ்சுக்கு, 26 பேரை மட்டுமே ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக 1,200க்கும் மேற்பட்ட பஸ்கள் தினசரி இயக்கப்படும்.

ஆனால் தற்போது 400 பஸ்கள் மட்டுமே முதற்கட்டமாக இயக்கப்படுகிறது. அதன்பிறகு பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். மேலும் ஓட்டுனர், நடத்துனர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கையுறை, முகக்கவசம் அணிந்து, பஸ்களை இயக்குவார்கள். பயணிகளும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

Views: - 0

0

0