‘உங்க இடத்துல நா இருந்திருந்தா தூக்குல தொங்கிருப்பேன்’: படையப்பா ஷூட்டிங்கில் ரஜினிக்கு நேர்ந்த அனுபவம்…போட்டுடைத்த பிரபல நடிகர்..!!

Author: Rajesh
11 April 2022, 6:10 pm
Quick Share

ரஜினிகாந்த் பல போராட்டங்களுக்குப் பிறகு தான் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். ஆரம்பத்தில் தனக்கு நடிப்பும் வரவில்லை, பாஷை புரியவில்லை என சினிமாவை விட்டு போக நினைத்தார்.

அதன்பிறகு சிலர் அறிவுரையால் பல அவமானங்களை சந்தித்து தான் இந்த இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது படையப்பா. இப்படத்தில் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக கனல் கண்ணன் பணியாற்றியிருந்தார். கனல்கண்ணன் சண்டைக் காட்சிகளில் எப்படி அசத்துவாரோ, அதேபோல நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து அசத்தியுள்ளார். சமீபத்திய பேட்டியில் கனல்கண்ணன், ரஜினிகாந்துடன் பணியாற்றியதை பற்றி பகிர்ந்துள்ளார்.

அதாவது படையப்பா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கனல் கண்ணன் ஸ்டன்ட் செய்யும்போது கேஎஸ் ரவிக்குமார் பயங்கரமாக திட்டுவாராம். கனல் கண்ணனை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது கேஎஸ் ரவிக்குமார்தானம். இதனால் கனல் கண்ணனுக்கு கே எஸ் ரவிகுமார் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளார்.

இதனால் அவர் திட்டுவது எல்லாம் கனல் கண்ணன் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாராம். இந்நிலையில் ஒருமுறை கேஎஸ் ரவிக்குமார் கனல் கண்ணனை திட்டுவதை ரஜினி பார்த்துவிட்டு கனல் கண்ணனை தனியாக அழைத்து பேசியுள்ளார். அவர் உன்னை பயங்கரமாக திட்டுகிறார் இதுவே என்னை அவர் இப்படி திட்டியிருந்தால் நான் தூக்கில் தொங்கி இருப்பேன் என விளையாட்டாக கூறியதை சமீபத்திய பேட்டி ஒன்றில் கனல் கண்ணன் கூறினார்.

கனல்கண்ணன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக உள்ள பல நடிகர்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி இருந்தார். மேலும், படையப்பா படத்திற்கு பிறகு ரஜினி உடன் கனல் கண்ணன் நிறைய படங்களில் பணியாற்றியுள்ளார்.

21 Years of Padayappa - Interesting facts behind Rajinikanth's Biggest  Blockbuster! Tamil Movie, Music Reviews and News

Views: - 463

1

0