ரஜினியின் ஆஸ்தான வில்லன்…இந்த மாஸ் ஹீரோ கூட மட்டும் நடிக்காததற்கு இதுதான் காரணமா?: கடைசி படத்தில் நேர்ந்த கொடுமை…!!

Author: Rajesh
23 March 2022, 5:25 pm
Quick Share

ரஜினியின் ஆஸ்தான வில்லன்…இந்த மாஸ் ஹீரோ கூட மட்டும் நடிக்காததற்கு இதுதான் காரணமா?: கடைசி படத்தில் நேர்ந்த கொடுமை…!!

நடிகர்களில் சிலரால் மட்டுமே கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே வாழ முடியும். அப்படி வாழ்ந்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகரை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

ரஜினி: `அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்' டு `அரசியலுக்கு வர முடியவில்லை'  - 1990 முதல் 2020 வரை! | Political timeline of rajini from 1990 to 2020

தமிழ் சினிமா வில்லன் என்றால், ஜிம் பாடியாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்தது. இதனை தகர்த்து, ஒல்லியாக இருப்பவர்களும் வில்லனாக நடிக்கலாம் எனவும் , வில்லனிசமான ஆட்டிட்யூட் இருந்தாலே போதும் என நிரூபித்தவர் ரகுவரன்.

ஒரு ஹீரோவுக்கான மாஸ் ஏறவேண்டும் என்றால், அந்த ஹீரோ எப்படிப்பட்ட வில்லனிடம் மோதுகிறார் என்பதைப் பொறுத்து தான் அமையும். அந்த வகையில் நடிகர் ரஜினியின் மாஸ் ஏறுவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ரகுவரன்.

இணையத்தை கலக்கும் நடிகர் ரகுவரனின் மகன் ! லேட்டஸ்ட் போட்டோ உள்ளே ! -  Cinemapettai

ஊர்காவலன், மனிதன், சிவா, ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம் என பல படங்களில் நடித்து ரஜினிக்கு ஆஸ்தான வில்லனாக மாறிவிட்டார் ரகுவரன். ஆனால், ரஜினிக்கு போட்டியாக கருதப்பட்ட கமல்ஹாசனும் ரகுவரனும் இணைந்து ஒரு படம்கூட நடிக்கவில்லை.

படம் குறித்த விமர்சனங்களில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என நன்றாக நடித்த நடிகர்களை பாராட்டுவார்கள். அவர்கள் கேமராவுக்கு முன்புதான் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால், நடிகர் ரகுவரன் கேமராவுக்கு பின்பும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

மறைந்த நடிகர் ரகுவரனுக்கு அஞ்சலி... வேலையில்லாப் பட்டதாரி படத்தில் தனுஷ்  பெயர் ரகுவரன்! | Dhanush's tribute to Raghuvaran - Tamil Filmibeat

அதற்கு உதாரணம் தான் அரண்மனை காவலன் படம். படத்தில் சர்வாதிகாரி கேரக்டராக ரகுவரன் நடித்திருப்பார். இதில் விஜயகுமாரை அரிவாளால் வெட்டுவது போல் ஒரு காட்சி. விஜயகுமாரும் ஸ்ரீவித்யாவும் ஆற்றில் பரிசலில் சென்று கொண்டிருக்கும் போது, தண்ணீருக்குள் இருந்து ரகுவரன் எழுந்து விஜயகுமாரை வெட்டுவதுதான் சீன்.

ரகுவரன் தண்ணீருக்குள் இருக்கும் போது அவர் அருகில் பரிசல் வரும் போது எழுந்து அரிவாளால் வெட்ட வேண்டும். ஆனால், 7 முறை டம்மி அரிவாள் மிஸ்ஸாகியிருக்கிறது. அப்போது இயக்குநரிடம் ரகுவரன், எனக்கு டம்மி அரிவாள் வேண்டாம். ஒரிஜினல் அரிவாள் கொடுங்க. அப்போதுதான் எனக்கு ரியலாக நடிக்க வரும் என்றிருக்கிறார்.

இதைக்கேட்ட விஜயகுமார் ஷாக்காகி, நீ ரியலா நடிக்கணும்னு என்னை ரியலா வெட்டிடாத ரகு என சொல்லிருக்கிறார். ரகுவரன் பிடிவாதமாக இருந்ததைப் பார்த்தபிறகுதான் விஷயம் சீரியஸ் என உணர்ந்திருக்கிறார்கள். யார் சொல்லியும் கேட்காத ரகுவரன், நடிகை ஸ்ரீவித்யா கொஞ்சம் கடிந்து பேசியப்பிறகுதான் டம்மி அரிவாளோடு நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார்.

வில்லனாக மிரட்டும் டப்பிங்கில்தான் அதிகம் மெனக்கெடுவார். ஒரு வார்த்தையை குறைந்தது 100 முறையாச்சும் வேற வேற பாணியில் பேசிப் பார்ப்பாராம். பாட்ஷா படத்தில் அவர் பேசிய ஆண்டனி… மார்க் ஆண்டணி என்பது இப்படிப்பட்ட ஒரு உழைப்பிற்கு பிறகு கிடைத்ததுதான்.

நடிகர் ரகுவரன் காலமானார் | Actor Raghuvaran no more - Tamil Oneindia

ரகுவரன் வில்லன் கதாபாத்திரங்களையும் தாண்டி முகவரி அண்ணன், ரன் மாமா, லவ் டுடே அப்பா என நல்ல, நல்ல கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், ரகுவரனுக்கு நடிப்பைவிட இசையில்தான் ஆர்வம் அதிகம். ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை.

கல்லூரியில் படிக்கும் போதே knock out என்கிற இசைக்குழு நடத்தி வந்திருக்கிறார். அதுபோக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் பல பாடல்களையும் இசையமைத்து, பாடி அதை பதிவு செய்து வைத்திருக்கிறார். அதில் சில பாடல்களை ரகுவரனின் மரணத்திற்குப் பிறகு raghuvaran a musical journey என்கிற பெயரில் ஒரு ஆல்பமாக மாற்றி ரஜினியை வைத்து ரிலீஸ் செய்திருக்கிறார் ரோகிணி.

இணையத்தை கலக்கும் நடிகர் ரகுவரனின் மகன் ! லேட்டஸ்ட் போட்டோ உள்ளே ! -  Cinemapettai

ரகுவரனுக்கு உடல்நிலை சரியில்லாத போது நடித்த படங்கள்தான் யாரடி நீ மோகினி, கந்தசாமி. இதில் யாரடி நீ மோகினி படத்தில் அவரது காட்சிகள் எல்லாம் நிறைவடைந்திருந்த நிலையில், கந்தசாமி படத்தில் மட்டும் சில நாட்கள் நடிக்க வேண்டி இருந்தது. அந்த சமயத்தில்தான் திடீரென ரகுவரன் தூக்கத்திலேயே காலமானார். அதன் பிறகுதான் கந்தசாமி படத்தில் ரகுவரனுக்கு பதில் ஆஷிஷ் வித்யார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

மறைந்தாலும் ரசிகர் மனதில் வில்லனு சொன்னாலே ஞாபகத்திற்கு வரும் நடிகர் முதல் 3 இடங்களில் இருப்பார் ரகுவரன்.

Views: - 650

0

1