உதகையை மிரட்டிய உறை பனி : மினி காஷ்மீர் போல காட்சி அளித்த நகரம்!!

12 November 2020, 10:39 am
Ooty Fog - Updatenews360
Quick Share

நீலகிரி : உதகையில் முன்கூட்டியே துவங்கியது உரை பனிப்பொழிவு இரண்டாம் நாளாக அதிகாலை நேரம் மினி காஷ்மீர் போல் காட்சி அளித்த உதகை நகரம்…

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் நீர்ப்பனி பொலிவும் அதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் உறை பனி சீசன் காலமாகும்.

இந்நிலையில் இந்த ஆண்டு நீர் பனி சீசன் தற்போது துவங்கி இரண்டு நாட்களில் , இன்று காலை உதகை முழுவதும் உரை பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் உதகை நகரம் முழுவதும் பச்சை கம்பளத்தில் முத்துக்கள் பதித்தது போல் காட்சியளித்தது.

குறிப்பாக உதகை ரயில் நிலையம், குதிரை பந்தய மைதானம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் மினி காஷ்மீர் போல் காட்சியளித்தது .

இன்று தொடங்கிய உரை பனிப்பொழிவு டிசம்பர் இறுதி வரை காணப்படும். இதனால் மாவட்டத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் காலநிலை நிலவுகிறது.

மேலும் தொழிலாளர்கள் கூறும்போது ஆண்டு தோறும் டிசம்பரில் தொடங்கும் உறைபனி தற்போதே துவங்கியுள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது எனவும் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

Views: - 20

0

0