சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை..ஒளிந்திருந்து பார்த்த இளைஞருக்கும் இரையான கொடுமை : அதிர வைத்த அரியலூர் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2021, 8:45 pm
Ariyalur Harrassment -Updatenews360
Quick Share

அரியலூர் : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்திலா கை பேர் குண்டர் சட்டத்தில் கைது- எஸ்பி உத்தரவின் பேரில் ஆட்சியர் நடவடிக்கை.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது பக்கத்து வீட்டு சிறுமியை ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அச்சிறுமியிடம் இதனை வெளியில் கூறினால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார்.

இந்நிலையில் சிறுமி தன் பெற்றோருடன் ஈரோட்டில் வேலைக்கு சென்றபோது விளந்தையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் பிரகாஷ் உடன் உறவு வைத்ததை வீட்டில் கூறிவிடுவேன் என மிரட்டி அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதில் அச்சிறுமி கர்ப்பம் ஆகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.

Views: - 285

0

0