பெண்கள் பாதுகாப்பிற்கு ‘காவலன்’ ஆப்: தீயணைப்பு மீட்புபணிகளுக்கு வந்தாச்சு ‘தீ’ செயலி..!!

23 January 2021, 3:49 pm
thee - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தின் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணித்துறை சார்பாக ‘தீ’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தீத்தடுப்பு மற்றும் மீட்பு அவசர உதவிக்கான ‘தீ’ என்ற செல்போன் செயலி குறித்து தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு தீயணைப்புத் துறை சார்பில், அவசர உதவிக்கான ‘தீ’ என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இந்தியாவிலே முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி வழியாக அழைத்தால் அந்த இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைவாக சென்று மீட்புப் பணியில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த ‘தீ’ செல்போன் செயலியின் பயன்கள் குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தீவிபத்து நடந்த இடத்தை துல்லியமாக கண்டறிய இந்த செயலி உதவியாக இருக்கும்.


தீவிபத்து, ஆழ்துளை கிணறு விபத்து, விலங்குகள் மீட்பு, வெள்ள பாதிப்பு என பல்வேறு சூழ்நிலைகளிலும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Views: - 10

0

0