தோனி சிக்ஸர் ரொம்ப முக்கியமா..கோட்டை விடும் CSK..முன்னாள் வீரர் காட்டம்.!

Author: Selvan
30 March 2025, 5:58 pm

CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை

ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் CSK 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதையும் படியுங்க: இது தானா..எதிர்பார்த்த நாளும் இதுதானா..நடிகை திரிஷா போட்டோ வைரல்..ரசிகர்கள் வாழ்த்து.!

இந்த சூழலில் இன்று கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ள CSK அணி அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்:CSK டாஸ் வென்ற பிறகு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வது தவறு,முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் சேர்ப்பதே நல்ல தீர்வு,அடுத்ததாக CSK பேட்டிங் வரிசையை முற்றிலும் மாற்ற வேண்டும்,கான்வே மற்றும் ருதுராஜ் ஜோடி முதலில் ஆட வேண்டும்.

மூன்றாவது இடத்தில் ரச்சின் ரவீந்திரா,நான்காவது இடத்தில் சிவம் துபே,ஐந்தாவது இடத்தில் ஜடேஜா விளையாட வேண்டும்.ஆறாவது இடத்தில் தோனி ஆட வேண்டும்.தோனி ஒன்பதாவது இடத்தில் ஆடுவது மிகப்பெரிய தவறு.

தோனியின் 2 சிக்சர் அடிக்கும் திறனை விட,அணிக்கு 2 புள்ளிகள் சேர்ப்பது முக்கியம்.அவர் குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழாவது இடத்தில் ஆட வேண்டும்.அதேபோல்,ராகுல் திருப்பாதி,தீபக் ஹூடா,ஷாம்கரன் போன்ற வீரர்களை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டாம்.

அஸ்வின் தனது பந்துவீச்சு ஸ்டைலை மாற்ற வேண்டும்.அவர் வெறும் கேரம் பந்து வீசுவதை விட,அவர் ஆப் ஸ்பின்னராக விளையாட வேண்டும்.

இத்தனை மாற்றங்களுடன் ஆடினால் மட்டுமே இன்று RR அணியை வீழ்த்தி CSK வெற்றியை ருசிக்க முடியும் என்பதே பலருடைய கருத்தாகவும் உள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?