நடுரோட்டில் உருண்டு விழுந்த இரும்பு குண்டு… கார், இருசக்கர வாகனம் சேதம் : கோவையில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2024, 7:46 pm

கோவை சுந்தராபுரம் – எல்.ஐ.சி காலனி பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு லாரியில் ஏற்றி செல்லப்பட்ட இரும்பு மிஷின் மெட்டீரியல் நடுரோட்டில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது விழுந்ததால் அதிர்ச்சி

கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு ஏற்றி சென்ற மிஷின் மெட்டீரியல் நடுரோட்டில் விழுந்ததால் கார் சேதம் – எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

எல்.அண்ட்.டி நிறுவனத்திலிருந்து லேத் கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றி அனுப்பி உள்ளார்கள். பாதுகாப்பில்லாமல் பெரிய இரும்பு உருண்டையை இரண்டு பக்கம் கட்டையை கட்டி லாரியில் ஏற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: தப்பியது தமிழகம்.. சிக்கியது தெலங்கானா : உயர்நீதிமன்றம் வைத்த டுவிஸ்ட்!

லாரியில் எடை தாங்காமல் சரிந்து ரோட்டுக்கு உருண்டு வந்ததால் வாகனங்கள் சேதமடைந்து எந்த உயிர் பாதிப்பும் இல்லாமல் அப்பகுதியில் சிறிது நேரம் வாகனங்களில் ஏற்பட்டது.சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?