ஆச்சரியமா தா இருக்கு..! பரபரப்பாக காணப்படும் திம்பம் மலைப்பாதை வெறிச்சோடியது!!

Author: Udayachandran RadhaKrishnan
30 May 2021, 2:13 pm
No one Dhimbam- Updatenews360
Quick Share

ஈரோடு : அதிக வாகன போக்குவரத்து நிறைந்து காணப்பட்ட திம்பம் மலைப்பாதை கொரோனா முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அமைந்துள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் இச்சாலை வழியாக 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கு மற்றும் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கால் அதிகளவில் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்பட்ட திம்பம் மலைப்பாதை தற்போது வெறிச்சோடி காணப்பட்டு குறைந்த வாகனங்கள் மட்டுமே சென்று வருகிறது.

எப்போதும் வாகனங்கள் அணிவகுத்தோ, ஏதாவது சிறு விபத்து ஏற்பட்டோ கூட்டமாக காணப்படும் இந்த திம்பம் மலைப்பாதை வெறிச்சோடி காணப்படுவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 194

0

0