கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan30 April 2025, 4:59 pm
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படியுங்க: இட்லி வர தாமதானதால் ஆத்திரம்.. ஹோட்டல் கடை உரிமையாளரின் மண்டை உடைப்பு!
அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுகவை வீழ்த்த அனைவரும் எதிர் அணியில் ஒன்று சேர வேண்டும் என்பது தேசிய ஜனநாயக கூட்டணியின் எண்ணம்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக டெல்லியில் சந்தித்தேன். அப்போது கட்சி மற்றும் பூத் கமிட்டி பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

கனிமொழி குறித்து பேசும்போது, முதலில் தேச பற்று வேண்டும். நம் நாட்டில் இருந்து கொண்டு வேறு ஒரு நாட்டை பற்றி பேசினால் தேசத்துரோகம் தான், பாகிஸ்தானில் உள்ள பாக்கிஸ்தானி யர்கள் கூட இந்த நாடு வேண்டாம், மோடி வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள்.

நம் நாட்டில் இருந்து கொண்டு நம் நாட்டுக்கு எதிராக பேசுபவர்களை என்ன சொல்ல முடியும் தேச விரோதிகள் என்று தான் கூற முடியும்..
