கலைஞர் நூலகம் கட்டும் பணி விரைவாக முடிகிறதா? விறு விறு பணியால் அடுக்கடுக்கான கேள்வி : அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2022, 1:10 pm

மதுரை : நெல்பேட்டை முதல் அவனியாபுரம் வரை பாலம் கட்டும் பணிக்கு திட்ட மதிப்பீடு நடைபெற்று வருகிறது என அமைச்சர் ஏ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ. வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மதுரையில் கட்டி வரும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, முதல்வர் கேட்டு கொண்டதன் அடிப்படையில் கலைஞர் நூலக கட்டிடப்பணியினை ஆய்வு மேற்கொண்டேன்.

இதற்கு என ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி போடப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் இந்த கட்டிட வேலை நடைபெற்று வருகிறது என்றார்.

இந்த கட்டிட பணி ஜூன் மாதத்திற்குள் முடிவடைந்து விடும். தற்போது 90% கட்டிட பணி முடிந்துள்ளது. அடுத்து இன்டீரியர் வேலை நடைபெறும். கலைஞர் நூலகம் என்பதால் விரைந்து பணிகள் நடைபெறுவதாக கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையல்ல.

மதுரையில் ஸ்மார்ட் (ஸ்மால்) திட்டம் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார். கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பாலத்திற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடக்கூடிய பணிதான் நடைபெற வேண்டி உள்ளது என்றார்.

மேலும் நெல்பேட்டை முதல் அவனியாபுரம் வரை தடையின்றி செல்ல மேம்பால திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!