தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகிறதா? இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2023, 10:04 am

2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒருமுறை மாற்றப்பட்டு வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை எதுவும் வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பில் சமூக வலைதளங்களில் பலரும் பல விதமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனைக்கு பின் பள்ளி திறப்பு தள்ளிப்போட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?