எங்க தலைவர்களை சந்தித்த ஆதாரம் இருக்கா? உங்க பிரேக்கிங் நியூஸ்க்காக நான் பேச முடியது : வானதி தடாலடி!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2025, 1:53 pm

கோவை, புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும்போது :-கோவை மாநகர் மாவட்டத்தில் சுமார் 25 கோவில்களில் விசேஷ அபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடைபெற்று வருகிறது.கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில், இந்த மகிழ்வான தருணத்தை மகிழ்வோடு கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

ஒரு கட்சியினுடைய சாதாரண தொண்டனாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ராதாகிருஷ்ணன், அவருடைய அரசியல் பணி, பொது வாழ்வில் அவர் முன்னெடுத்து இருக்கின்ற பல சிறப்பு வாய்ந்த மக்கள் நல திட்டங்கள், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மாநில தலைவராக, இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக, தொகுதி மக்களுக்கும் தமிழகத்திற்கும் அவராற்றிய சிறந்த பணிகள், என கல்லூரி காலத்தில் இருந்து அவர் கட்சியில் இணைந்து மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து பாடுபட்டவர்.

ஆனால் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை, தமிழர்களுக்கான துரோகத்தை இன்று திராவிட முன்னேற்ற கழகம் செய்து கொண்டு இருக்கிறது.இதற்கு முன்பாக மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட போது,கட்சி சார்பு இன்றி அத்தனை மகாராஷ்டிரா காரர்களும் பிரதீபா பாட்டீலை ஆதரித்தார்கள்.

ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு அவர்கள் குடியரசு தலைவராக ஆகும்பொழுது ஒடிசாவை சேர்ந்த அனைவரும் தங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்தார்கள்.

Is there any evidence that we met with our leaders.. Vanathi Tension

ஆனால் தமிழர்கள் எல்லாம் ஒன்று பட வேண்டும் என பேசுகிற திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கூட்டணி கட்சிகளும் இன்று நம்முடைய தமிழர் வேட்பாளராக நிற்கும்பொழுது, அவருக்கு மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் ஆதரவு தெரிவிக்கிறார்கள்,

ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த இந்த கூட்டணி கட்சிகள் தி.மு.க வோடு சேர்ந்து, தமிழருக்கு எதிரான துரோகத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

வரலாறு இதை மன்னிக்கவே மன்னிக்காது என்று கூறினார். கூட்டணியில் இருந்து, டி.டி.வி., ஓ.பி.எஸ் போன்றோர் விலகிச் செல்வது குறித்தான கேள்விக்கு,தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருந்து கொண்டு தான் இருப்பார்கள், இவர்களில் அந்தந்த கட்சிக்கு உள்ளாக சில பிரச்சனைகள் வருகிற பொழுது அந்த கட்சியினுடைய தலைமை அதற்கு ஏற்ப முடிவு செய்யும்.

தேசிய ஜனநாயக கூட்டணியை, பலப்படுத்த வேண்டும், நம்முடைய ஒற்றை இலக்கு என்பது 2026 ல் தி.மு.க ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவது. இதை உணர்ந்து கொண்டு அத்தனை பேரும், ஓரணியில் இணைய வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியினுடைய தலைமையின் எண்ணம்.

மிக விரைவில் வெகு நிச்சயமாக, இந்த தேர்தலில் கூட்டணி என்பதை தாண்டி கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகப்போகிறது. இன்னும் சிறிது காலம் இருக்கிறது தேர்தலுக்கு அதனால், வெகு நிச்சயமாக கூட்டணிக்குள் இருக்கிற அனைத்து சிக்கல்களும் விரைவில் சரி செய்யப்பட்டு, தி.மு.க வுக்கு எதிராக ஒரு வியூகம் வகுக்கப்பட்டு, அதற்கான செயல் திட்டத்தில் இருக்கிறோம் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் என கூறினார்.

அ.தி.மு.க வில் வரக் கூடிய பிரச்சனைகளுக்கு, அவர்கள் ஏன் பி.ஜே.பி தலைவரை சென்று சந்திக்கிறார்கள் என்ற கேள்விக்கு, எதிர்க்கட்சித் தலைவர், பாரதிய ஜனதா தலைவரை சென்று சந்தித்த பிறகு கூட்டணி அமைந்து இருக்கிறது.ஏதாவது மற்ற தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை சென்று சந்தித்ததற்கான ஆதாரம் இருக்கிறதா?..

அவர்களுடைய புகைப்படமோ அல்லது எங்கள் கட்சியின் தலைவர்கள் சமூக வலைதளத்தில் ஆதாரப்பூர்வமாக ஏதாவது செய்திகள் வெளியிட்டு இருந்தார்களா??.. மற்ற தலைவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு, நாங்கள் எதற்கும் பதில் சொல்ல முடியாது எனக்கு கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!