நட்சத்திர ஜோடி ராமராஜன் – நளினி பிரிந்ததற்கு இந்த நடிகைதான் காரணமா? கோலிவுட்டை புரட்டி போட்ட தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2022, 4:39 pm

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படம் சேது. அதற்கு முன் வரை ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும், சேது திரைப்படம் மாபெரும் வெற்றியை தேடி தந்து மகாநடிகன் என விக்ரமுக்கு சீயான் என்ற பெயரும் வந்தது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை அபிதா. சேது படத்துக்குபின் பெரிய வாய்ப்பில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் தலைகாட்டி வந்தார்.

பின்னர் மெல்ல மெல்ல சின்னத்திரை பக்கம் ஓடிவிட்டார். தற்போது அவர் பட வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்.

திருமதி செல்வம் என்ற நாடகத்தில் நடத்த அவருக்கு பெயர் புகழ் கிட்டியது. 6 ஆண்டுகள் அந்த நாகடம் ஒளிபரப்பானது. சுனில் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிய அபிதாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அவரைபற்றி சில விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ராமராஜனுடன் இணைந்து அபிதா நடித்த திரைப்படம்தான் சீறி வரும் காளை.

இந்த படத்தில் ராமராஜனுக்கும், அபிதாவுக்கு நெருக்கம் ஏற்பட்டதால்தான் ராமராஜன் மனைவி நளினி பிரிந்து போனதாக செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்துதான் நளினி ராமராஜனை விவாகரத்து செய்ததாக தகவல் வெளியானது.

ஆனால் சமீபத்தில் பேட்டியல் பேசிய நடிகை அபிதா, தான் படிப்பிடிப்பில் பங்கேற்ற பின் கேரவனுக்கு சென்றுவிடுவேன், ஆனால் என்னையும் ராமராஜனையும் இணைத்து பேசுவது ஏன் என தெரியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

  • kayadu lohar talks about situation ship going viral என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?