தொண்டர்களை சந்திக்காமல் நடிகையை சந்தித்த விஜய் ஒரு தலைவரா? திமுக பேச்சாளர் தரக்குறைவான விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2025, 11:59 am

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 102 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஆரணி பஜார் வீதியில் மாவட்ட கழக பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் கலைஞர் தேசிய தலைவர்களிடம் அரசியல் செய்தவர். தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமித்ஷா எடப்பாடி அண்ணாமலை சீமான் விஜய் போன்றவர்களிடம் அரசியல் செய்யும் நிலைமை.

தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் அவரது பிறந்தநாளில் தன்னை சந்திக்க வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை சந்திக்காமல் நடிகை திரிஷாவை மட்டுமே சந்தித்ததாகவும் கட்சியின் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை எனவும் விமர்சனம் செய்தார்.

விஜய் ஒரு அரசியல் தலைவரா இவர் 2026ல் திமுகவை தமிழகத்தில் இருந்து வீட்டுக்கு அனுப்புவதாக பேசுகிறார் என்றும் மத்திய அரசு ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை குறைப்போம் கேபிள் டிவி விலையை குறைப்போம், பெட்ரோல் விலையை குறைப்பபோம் என தெரிவித்ததாகவும் ஆனால் அனைத்தும் விலை உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

பாஜகவினர் முருகனை காப்பாற்றுவோம் என மாநாடு நடத்தி காதில் பூ சுற்றுவதாகவும் தெரிவித்த அவர் கலைஞரை விட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அதிக நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொதுக் கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!