20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு : அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நன்றி தெரிவித்த இஸ்லாமியர்கள்..!

Author: Babu
5 October 2020, 4:13 pm
minister sp velumani - updatenews360
Quick Share

கோவை : 20 ஆண்டு காலமாக வைக்கப்பட்டு வந்த கோரிக்கையை நிறைவேற்றித் தந்த அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு இஸ்லாமியர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களது மதத்தினரில் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய கபர்ஸ்தான் நிலம் ஒதுக்க வேண்டும் என அண்மையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். 20 ஆண்டுகளாக விடுத்து வரும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக அவரும் உறுதியளித்திருந்தார்.

அதன்படி, மதுக்கரையில் முக்கிய சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அதிகாரிகளின் ஆய்வுக்குட்படுத்திய அமைச்சர் வேலுமணி, அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

SP Velumani - Updatenews360

இந்த நிலையில், இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.1.40 கோடி மதிப்பிலான ஒன்றே முக்கால் ஏக்கர் பரப்பளவிலான இடம் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியாவது :- கடந்த 20 ஆண்டுகளாக மதுக்கரை பகுதி இஸ்லாமியர்கள் விடுத்து வந்த கோரிக்கை என்பதை அறிவேன். இந்தக் கோரிக்கையை ஏற்று, எப்படியாவது கபர்ஸ்தான் நிலம் வழங்க நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறியிருந்தேன். அதன்படி, இன்று நிலம் வழங்கியுள்ளேன். இந்த இடம் முக்கிய சாலை வழியில் அமைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதேபோல, கிறிஸ்துவர்களுக்கு தனி மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கு தேவையான வளர்ச்சியை கோவை மாவட்டத்திற்கு கொடுத்துள்ளோம். கோவை சத்தி ரோடு, அவிநாசி ரோடு, திருச்சி ரோடு சாலைகளில் பாலம் கட்டப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன வளர்ச்சி தேவை என்று என்னிடம் கூறுங்கள், அதனை செய்து தருகிறோம், என்றார்.

Views: - 60

0

0