கோவில்களில் நடைமுறைகளை மாற்றுவது சரியல்ல : திமுக அரசுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கடும் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2021, 4:24 pm
Srivilliputhur Jeeyar -Updatenews360
Quick Share

விருதுநகர் : அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு அறிவித்து பணி ஆணை வழங்கியுள்ளது. இதை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு அமைப்பினரும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவில் உள்ள மனவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்துக் கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும் எனவும் நடைமுறைகளை மாற்ற கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் இந்த ஆணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Views: - 345

0

0