₹240 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு… சிக்கலில் பிரபல நிதி நிறுவன அதிபர்!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2024, 8:04 pm

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார்

இவர் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் 10க்கு மேற்பட்ட மாநிலங்களில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏல சீட்டுகள் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: சொந்த ஊரில் அண்ணாமலை வார்டு உறுப்பினர் ஆக முடியுமா?கேட்கிறார் திமுக எம்எல்ஏ!

மேலும் கேரளா கர்நாடகா மற்றும் தமிழகத்திலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது

இந்நிலையில் கடந்த 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை நான்கு நாட்களாக மதுரையில் இருந்தும் கோவையிலிருந்தும் சுமார் பத்து வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் செந்தில்குமார் வீடு மற்றும் அருகில் உள்ள வீடுகளில் சோதனைகளில் ஈடுபட்டனர்

Tax Evasion IT raid

தற்போது வருமான வரித்துறை அதிகாரிகளால் ஆய்வு குறித்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் சோதனையில் சுமார் 10 கோடிக்கு மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சுமார் 240 கோடி அளவுக்கு வரியைப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரி வைப்பு செய்ததற்கான சொத்து மற்றும் முதலீடு ஆவணங்கள் சோதனை போது சிக்கி உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?