“அது இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும்தான்“ : உயர்கல்வித்துறை எச்சரிக்கை
5 December 2020, 3:46 pmகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்படட்டன. இந்த நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் 2ஆம் தேதி முதல் ஆர்வமாக கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இதனிடையே சில கல்லூரி நிர்வாகம், மாணவர்களை நேரடியாக கல்லூரிக்கு வரவேண்டுமென கட்டாயம் விதிகக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.
இது குறித்து உயர் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியுள்ளதாவது, அரசு முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், பிற ஆண்டு மாணவர்களை கல்லூரிக்கு வர நிர்பந்தம் செய்யக் கூடாது என தெரிவித்துள்ளது.
மேலும் பிற ஆண்டு மாணவர்களை கல்லூரிக்கு வரவழைப்பது குறித்த தகவல் வந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
0
0