ஜெ., காரில் அதிமுக கொடியுடன் அப்பலோ வந்த சசிகலா : மதுசூதனனை நலம் விசாரிக்க வருகை!!

20 July 2021, 1:00 pm
Sasikala Apollo -Updatenews360
Quick Share

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனை சந்திக்க காரில் அதிமுக கொடியுடன் அப்போலோ மருத்துவமனைக்கு சசிகலா வந்தார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் உறுப்புகளில் செயல்பாடுகள் சற்று குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலா மதுசூதனை சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க, காரில் அதிமுக கொடியுடன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனை நலம் விசாரிக்க முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் சென்றுள்ள நிலையில் சசிகலாவும் நலம் விசாரிக்க சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 179

0

0