கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ஜெகத்ரட்சகன்.. இதெல்லாம் பழி வாங்கும் நடவடிக்கை : அமைச்சர் பொன்முடி கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2023, 1:51 pm

கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ஜெகத்ரட்சகன்.. இதெல்லாம் பழி வாங்கும் நடவடிக்கை : அமைச்சர் பொன்முடி கருத்து!!

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பிலும் விழுப்புரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.

இதில் பெண்கள் மற்றும் ஆண்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி நேற்று முதல்வர் சொல்லி இருக்கிறார். இதெல்லாம் அரசியல் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆங்காங்கே சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதுவும் ஜெகத்ரட்சகனை பொறுத்தவரை அவர் எப்படி உழைப்பால் உயர்ந்தவர் என்று என்பதை நாடு அறியும். எனவே வேண்டுமென்றே அரசியல் நோக்கத்திற்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நேற்று தமிழக முதலமைச்சர் சொல்லியதைப் போல இன்று அதையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருப்பவர். ஆகவேதான் அவரை எப்படி பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நடைபெற்றுக் கொண்டிருப்பது என்று மக்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?