போலீசே ஆதரவு.. என்ன கொலை செஞ்சிடுவாங்க.. ஜாகீர் உசேன் பேச்சு!

Author: Hariharasudhan
18 March 2025, 4:58 pm

கொலை மிரட்டல் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாக கொலையுண்ட ஜாகிர் உசேன் வீடியோவில் கூறியுள்ளார்.

திருநெல்வேலி: நெல்லை டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜிலி (57), காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அவரின் தனிப்பிரிவு அதிகாரியாக வும்இருந்தார்.

இந்த நிலையில், ரம்ஜானை ஒட்டி நோன்பு இருந்து வரும் நிலையில், இன்று அதிகாலையில் தர்காவுக்கு தொழுகைக்குச் சென்று திரும்பும்போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகிய இருவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்த நிலையில், ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “கிருஷ்ணமூர்த்தி என்பவர் தெளபிக் என தனது பெயரை மாற்றி, இஸ்லாமில் சேர்ந்துள்ளார். இரண்டாவதாக இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்துள்ள நிலையில், தனது மனைவி மூலமாக வஃக்பு வாரியத்தின் சொத்தான 36 சென்ட் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்று வருகிறார்.

Nellai Murder

அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில், என் மீதும் எனது மனைவி மீதும் வன்கொடுமை வழக்கு கொடுத்துள்ளார். இது விசாரணையில் உள்ளது. பிரச்னைக்குரிய நிலத்தின் அருகில் உள்ள 2.5 சென்ட் வஃக்பு வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தில் வருமானம் ஈட்டும் நடவடிக்கையாக ஒரு தற்காலிக கொட்டகை அமைக்க முயன்றேன்.

அப்போது பகிரங்கமாக கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக் கொலை மிரட்டல் விடுத்தார். எனது உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எப்படியும் என்னை கொலை செய்து விடுவார்கள். கொலை மிரட்டல் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன்.

இதையும் படிங்க: 25வது நாளை கடந்த ‘டிராகன்’.. தியேட்டரில் வசூல் ஆட்டம்..!

தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையாளர் செந்தில்குமார் ஆகியோர்தான் எதிர் தரப்பிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். கொலை மிரட்டல் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக கொடுக்கப்பட்டும், காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை” என பேசியுள்ளார்.

மேலும், இந்தக் கொலை மிரட்டல் சம்பவத்தின் பின்னணியிலும் வஃக்பு இடம் ஆக்கிரமிக்கும் பின்னணியிலும் திமுகவைச் சார்ந்த மின்சார வாரியத்தில் பணிபுரியும் உதவிப் பொறியாளர் ஒருவரின் பெயரையும் ஜாகிர் உசேன் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!