ஜெய்ஹிந்த் சர்ச்சை…ஈஸ்வரன் மீது தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும்.. காடேஸ்வரா சுப்ரமணியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2021, 4:29 pm
Kadeswara Subramaniyam - Updatenews360
Quick Share

கோவை : கொங்கு நாடு தேசிய கட்சியின் நிறுவன தலைவர், கொங்கு ஈஸ்வரன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர், தனது உரையின் போது ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உச்சரிக்காததால், தமிழகம் தலை நிமிர்ந்து வருகின்றது என்று, சர்ச்சையான முறையில் பேசியுள்ள திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர், கொங்கு ஈஸ்வரனை தேச துரொக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில், இன்று, செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டசபையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உச்சரிக்காத காரணத்தினால் தமிழகம் தலைநிமிர்ந்து வருகின்றது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கொங்கு ஈஸ்வரனை, இந்து முண்ணனி கண்டிக்கின்றது.

இந்த பேச்சுக்களை, திமுக ஆதரிக்கின்றதா? அல்லது, எதிர்கின்றதா? என்பது குறித்து இதுவரை திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை அறிக்கை வெளியிடாமல் உள்ளது ஏற்புடையதல்ல.

திமுக அரசு இதற்கு ஒன்று எதிர்ப்பை தெரிவிக்கவிக்க வேண்டும், அல்லது ஆதரவு தெரிவிக்கவிக்க வேண்டும், எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பது மறைமுகமாக இதனை ஆதரிக்கின்றதா என்ற கேள்விக்குறி, மக்கள் மத்தியில் எழுகின்றது.

எனவே ஆளுகின்ற திமுக அரசு இதனை எதிர்கின்றதா? ஆதரிக்கின்றதா? என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கூறிய அவர் இதுபோன்ற சர்ச்சை பேச்சுக்களை பேசியதற்காக கொங்கு ஈஸ்வரன் மீது தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும்.” என்றார்.

Views: - 213

0

0