ஜெயில்ல ரொம்ப கொடுமை… ஒரே ரூம்ல 60 பேரை அடைக்கறாங்க : சிறையை பார்த்து நாங்க அஞ்சமாட்டோம்.. அமர்பிரசாத் விளாசல்!

Author: Udayachandran RadhaKrishnan
15 November 2023, 9:02 pm

ஜெயில்ல ரொம்ப கொடுமை… ஒரே ரூம்ல 60 பேரை அடைக்கறாங்க : சிறையை பார்த்து நாங்க அஞ்சமாட்டோம்.. அமர்பிரசாத் விளாசல்!

சென்னையில் இன்று அமர் பிரசாத் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, என்னுடைய அரெஸ்ட் குறித்து முதல்வர் ஸ்டாலின், உதயநிதியிடம் பிரஸ்தான் கேள்வி கேட்கனும். என் மீது பொய் வழக்கு எல்லாம் போட்டு, புழல் சிறையில் இருந்து 5 பஸ்ஸில் அம்பாசமுத்திரம் கூட்டிட்டு போனாங்க. பாஜக தொண்டன் இதற்கு எல்லாம் எங்கேயும் கலங்கமாட்டான்.

எங்களுடைய பாஜக டிரெயினிங் புரோகிராமும் ஜெயிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரிதான் எங்களுக்கு டிரெயினிங்கே கொடுப்பாங்க. அப்படிதான் நாங்கள் வாழ்வோம். ஆர்.எஸ்.எஸ்.-ல் முதல் ஆண்டு முகாமாகட்டும் எல்லாமே இந்த அடிப்படையில்தான் வரும். சிறையை பார்த்து தயங்குகிற ஆட்கள் நாங்கள் இல்லை.

இதெல்லாம் ஒரு கேஸா? இதெல்லாம் போட்டு பாஜகவை நிறுத்திட முடியுமா? பாஜக தலைவர்களை நிறுத்திட முடியுமா? தோல்வி பயம் வந்துவிட்டது திமுக. வெளிப்படையாகவே திமுக காட்டுகிறது. எதிர்த்து நிற்கிற அத்தனை பேரையும் பொய் வழக்கு போட்டு கைது செய்யுறாங்க.

எதாவது உங்ககிட்ட எவிடென்ஸ் இருக்கான்னு? கருக்கா வினோத் விவகாரத்தில் ஆதாரங்களை காட்டுறீங்க.. எனக்கு எதிரான ஆதாரங்கள் எங்கேன்னு கேட்கிறேன்.

இந்த வழக்குகளை கண்டு நாங்கள் பின்வாங்கி ஓடிவிடப் போகிறோமா? இது நீதிமன்ற நடைமுறைகள். உள்ளே, துப்பாக்கியால் சுட்டு பிடித்த ஒரு நபரை என் பக்கத்தில் படுத்து வைத்து மிரட்டுறாங்க.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு கொண்டு போவேன். அந்த ஆணையத்தை சென்னை புழல் மத்திய சிறைக்கு கொண்டுவந்தே தீருவேன்.

எனக்கு சில விஷயங்கள் தெரியாம இருந்துச்சு.. நான் சாஃப்ட் பாலிட்டிக்ஸ் செய்துகிட்டு இருந்தேன். அதில் இருந்து வெளியே கொண்டு வந்து, நேரடியாக நான்தான் அவருடைய எதிரின்ற மாதிரி எல்லாம் கொண்டு வந்து நிப்பாட்டிட்டாரு.. ரேஷன் அரிசியே 25% மட்டும்தான் வருது.. காலையில டீன்னு ஒன்னு போடுவாங்க.. டீ கண்டுபிடிச்சவன் எங்கேயாவது போய் குதிச்சுடுவான்.

வெளியில ஒரு கட்டு காஜா பீடி ரூ30. ஆனால் ஜெயிலில் ஒரு கட்டு காஜா பீடி ரூ300 சார்.. இதை எப்படி ஒத்துக்கொள்வீர்கள்? ஒவ்வொரு ரூமிலும் நாய்க மாதிரி, எருமைமாடுக மாதிரி உள்ள தூக்கி போட்டு 50,60ன்னு அடைச்சீங்கன்னா எப்படி முடியும்? எவ்வளவு இன்ஃபெக்சன் உள்ள வரும்? இவ்வாறு அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!