அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது: களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்…உள்ளூர் மக்களுக்கு மட்டும் அனுமதி..!!

Author: Aarthi Sivakumar
14 January 2022, 9:20 am
Quick Share

மதுரை: கட்டுப்பாடுகளுடன் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான இன்று நடக்கிறது பாலமேட்டில் நாளையும், அலங்காநல்லூரில் 17ம் தேதி நடைபெறுகிறது.

Jallikattu Started at Avaniyapuram in Madurai || உலக புகழ்பெற்ற அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்: சீறிப்பாய்ந்த காளைகள்...!

இந்நிலையில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது. 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் களமிறங்கியுள்ளனர். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் உள்பட முக்கிய நபர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதன் பின்னர் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. அவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Jallikattu competition today in Avanyapuram: 700 bulls, 300 players find  the field ...! || அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள்,  300 வீரர்கள் களம் காணுகின்றனர்...!

அவனியாபுரம் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண குறைவான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

Views: - 183

0

0