கோவையில் ஜல்லிக்கட்டு திருவிழா பணிகள் விறுவிறு… 750 காளைகளுடன் மல்லுக்கட்டும் 500 காளையர்கள்..!!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2025, 11:56 am

கோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடத்தப்படுகிறது.

இதையும் படியுங்க: டாக்டர் ஆகணும்னா கேட்டரிங் படிக்கணும்? மண்டையை பிச்சிக்க வைத்த தலைவாசல் விஜய்?

இதற்கான வாடிவாசல், கேலரி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. பைபாஸ் சாலையில் ஒட்டி காளையை வீரர்கள் அடக்கம் சிலை அமைக்கப்பட்டு செல்பி பாயிண்ட் திறக்கப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

Jallikattu festival work in full swing in Coimbatore

750 காளைகளை அடக்க 500 வீரர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். பத்தாயிரம் பேர் அமரும் வகையில் கேலரி அமைக்கப்பட்டு உள்ளது. அதிக காளைகளை அடக்கும் முதல் மூன்று வீரர்களுக்கு முறையை கார், பைக், ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்படுகிறது.

சிறந்த காளைகளுக்கும் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ரூபாய் ஐயாயிரம் மதிப்பு உள்ள சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!