தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு: தமிழக அரசு அனுமதி..!!

12 January 2021, 8:20 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

2021ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. திறந்த வெளியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது, மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதன் பின்னரே அனுமதிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஜல்லிக்கட்டு போட்டிகளில், 300 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை காணவரும் பார்வையாளர்களுக்கு முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 11

0

0