கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜம்சீர் அலியிடம் 8 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை

Author: Udhayakumar Raman
13 September 2021, 11:57 pm
Quick Share

நீலகிரி: கோடநாடு வழக்கில் 4வது குற்றவாளியான ஜம்சீர் அலியிடம் 8 மணி நேரத்துக்கு மேலாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையானது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் இதில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அரசு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்காவது நபரான ஜம்சிர் அலியிடம் 8 மணி நேரத்துக்கு மேலாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதகை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் ஆஜராகிய அலியிடம் தனிப்படை விசாரணை நடத்தியது. கோடநாடு எஸ்டேட் பங்களாவில் ஜன்னல்களை உடைத்து நுழைந்த 4 நபர்களில் ஒருவர் ஜம்சிர் அலி என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 134

0

0