ஜனவரி மழை பாதிப்பு : 11 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்த எடப்பாடியார்!!

1 February 2021, 10:56 am
CM Farmer- Updatenews360
Quick Share

தமிழகத்தில் ஜனவரி மாத பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் பெய்த மழையால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். வதொடர் பெய்த மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகை 13,500 ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மானாவாரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத்தை தொகை 10 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணம் ஹெக்டேர் ஒன்றுக்கு 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஹெக்டெருக்கு மட்டுமே இடுபொருள் நிவாரணம் என்கிற உச்சவரம்பு தளர்த்தப்பட்டு உச்சரம்பின்றி நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் நிதி உதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகளுக்கு ரூ.1116 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும், ஜனவரி மழையால் பாதிக்கப்பட்ட 6.81 லட்சம் ஹெக்டேர் பயிர்களுக்கு நிவாரணம் வாங்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

11 லட்சம் விவசாயிகளுக்கு ஜனவரி மழை நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு பல்வேறு மானியத் தொகை மற்றும் நிவாரணங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 1

0

0