ஜெயலலிதா ஆன்மீகவாதிதான்.. ஆனால் மதவெறி பிடித்தவர் அல்ல.. அண்ணாமலைக்கு காங்., மூத்த தலைவர் பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2024, 4:07 pm

சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் பேட்டி ஒன்றில் பேசுகையில், ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்றும், அவர் தன்னுடைய இந்து அடையாளத்தை வெளிப்படையாகவே பல்வேறு இடங்களில் காட்டினார் என்றும், தனது சம்பளத்தை கூட இந்து கோயில்களுக்கு நன்கொடையாக கொடுத்தார் என்றும் பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த கருத்துக்கள் அதிமுக வட்டாரத்தில் கடும் எதிர்ப்பலைகளை எழுந்தது. அதிமுக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

அரசியல் உள்நோக்கத்திற்காக அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார் என்றும், ஜெயலலிதா அனைத்து மதத்திற்குமான தலைவர் என்றும் கருத்துக்களை கூறினர்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி எம்.பி திருநாவுக்கரசு அண்ணாமலையின் கருத்து பற்றி கூறுகையில், எனக்கு தெரிந்த வரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மீகவாதி தான்.

மேலும் படிக்க: சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்தது யார்? சந்தேகத்தை கிளப்பும் வழக்கறிஞர்!

ஆனால் மதவெறி பிடித்தவர் இல்லை. தெய்வபக்தி உள்ளவர்கள் எல்லாம் மதவெறி பிடித்தவர்கள் அல்ல. எம்ஜிஆரும் சாமி கும்பிடுவார். சாமி கும்பிடுபவர்கள் எல்லாம் மதவெறி பிடித்தவர்கள் இல்லை. ஆன்மிகம் வேறு மதவெறி என்பது வேறு என திருநாவுக்கரசு தனது கருத்தை முன்வைத்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!