சாலையில் தாறுமாறாக ஓடிய ஜேசிபி.. சாலையோர கடைகளுக்குள் புகுந்ததால் விபத்து : போதை ஓட்டுநருக்கு ‘தர்ம அடி’ கொடுத்த மக்கள்.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2023, 10:44 am

சாலையில் தாறுமாறாக ஓடிய ஜேசிபியால் விபத்து.. போதை ஓட்டுநருக்கு ‘தர்ம அடி’ கொடுத்த மக்கள்.. ஷாக் வீடியோ!!

கர்நாடகா மாநிலம் மாண்டியா அருகே உள்ள பெல்லுர் மார்க்கெட் பகுதியில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஜேசிபி வாகனத்தை ஒட்டிவந்ததாக கூறப்படுகிறது.

குடிபோதையில் இருந்த ராஜேஷ் சாலையில் ஜேசிபி யை தாறுமாறாக ஒட்டியதில் அச்சமடைந்த பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஒட்டம்பிடித்தனர்.

குடிபோதையில் ஜேசிபி வாகனத்தை நிறுத்த முடியாமல் தள்ளாடிய ஓட்டுநர் ராஜேஷ் சாலையோர காய்கறி கடைகள், டீக்கடைகளுக்குள் புகுந்ததால் சேதமடைந்தது.

https://vimeo.com/884260748?share=copy

சாலையில் ஜேசிபி வாகனம் தாறுமாறாக ஒட்டி கடைகளை சேதப்படத்திய ராஜேஷ்க்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

https://vimeo.com/884260785?share=copy

பொது மக்களிடம் தர்ம அடி வாங்கிய ஓட்டுநர் ராஜேஷ் மருத்துவமனையில் சேர்த்தனர். குடிபோடாயில் வாகனம் ஒட்டியதால் போலீசார் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியாது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?