மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: இன்று சவரனுக்கு ரூ.264 உயர்வு..!!
23 February 2021, 1:20 pmசென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.35, 424க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி தங்கம் விலை கடந்த 1 ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்தது. அதன் பிறகு தங்கத்தின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.35,160க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.4,385க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்து ரூ.35,424-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,428க்கு விற்பனை செய்யப்படுகிறது.
0
0