உன் வீட்டுல கெட்ட ஆவி உலாவுது.. நோக்கு வர்மம் செய்து நகைகளை அபேஸ் செய்த மந்திர திருடன் : கோவை மக்களே உஷார்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2023, 2:22 pm

உன் வீட்டுல கெட்ட ஆவி உலாவுது.. நோக்கு வர்மம் செய்து நகைகளை அபேஸ் செய்த மந்திர திருடன் : கோவையில் பயங்கரம்!!

சூ அச்சகா,பக்சா, உங்க வீட்டில கெட்ட ஆவி உலாவது,அத வெரட்டனும்னா, கையில கலுத்தில இருக்கிற தங்கத்தை எடுத்து வை, இல்ல ரத்தம் கக்கி சாவ்வே. இப்படி ஹிப்னாடிசம் செய்து ரூ. 25,000 மதிப்புள்ள தங்க மோதிரங்களை பறித்து சென்ற மந்திர திருடனை போலீசார் தேடி வருகிறார்கள்,

சினிமா நகை சுவை காட்சியில் வடிவேலு மயில்சாமி நடித்த காமெடி காட்சி தான் கண் முன் வருகிறது. இது என்னங்க இது புதுசா,புதுசா பித்தலாட்டம் செய்ய கிளம்பிட்டானுங்க இப்படி ஒரு புகாரு கோவை பீளமேடு காவல் நிலையத்தில கொடுத்திருக்காங்க ஒரு தம்பதி.

கோவை விலாங்குறிச்சி, சேரன்மாநகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் முரளி மனோகர் (வ53) ,இவரது மனைவி பிரகதீஸ்வரி (பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டது ) (வ47), இவர் தனது வீட்டில் வேலையை முடித்து விட்டு, பூஜை ரூம்பில் சாமி கும்பிட தயார் ஆன போது, வீட்டின் வாசல் மணி அடிக்க, வீட்டின் உள்ளே இருந்தபடியே எட்டி பார்த்த பெண்மணியை கேட்டின் வாசலில் காவி உடையில் மந்திர வாதி போல நின்ற இளைஞன், தன் கையில் ஏதோ வைத்து பெண்மணியை நோக்கி உன் வீட்டின் உள்ளே கெட்ட ஆவிகள் உலா வருது அதை விரட்டயில்லனா, உன் புருஷன் செத்து போவாரு என கத்தி சொன்னான், பயந்து போன பெண்மணி வெளியே வரவில்லை.

ஆனால் அந்த மந்திர திருடன் மீணடும், மீண்டும் வீட்டின் முன்பு நின்று கொண்டு அழைத்துள்ளான், இவரும் வீட்டின் உள்ளே இருந்தபடி கேட்டுள்ளார்.

ஆனால் வெளியே இருந்த நபர் (முரளி மனோகர் மனைவியை) வெளியே வருமாறு அழைத்துள்ளான் . பிரகதீஸ்வரியும் என்ன என்று கேட்டபடி வெளியே வந்துள்ளார்.

அவரிடம் பேச்சு கொடுத்தபடியே, மந்திர திருடன், என் முகத்தைப் பார் என்று ஹிப்னாடிசம் செய்துள்ளான், இதனால் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே அடையாளம் தெரியாத நபர் கூறியபடி தனது கையில் மாட்டி இருந்த 2 தங்க மோதிரங்களை கழட்டி கொடுத்துள்ளார்.
சுயநினைவு இல்லாமல் மோதிரத்தை கழட்டி கொடுத்தவுடன் , வாங்கிய நபர் தப்பிச் சென்றாக கூறப்படுகிறது. இதில் நீண்ட நேரம் கழித்து சுயநினைவு திரும்பியதும், தனது கையில் இருந்த மோதிரம் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தவர் .

பின் தனது கணவர் முரளி மனோகருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கணவரிடம் நடந்த விபரங்களை கூறியுள்ளார், அதில் உன் வீட்டில் செத்து போன உன் மகனுடன் கெட்ட ஆவிகள் வீட்டிற்குள்ளே இருக்கு, அதை விரட்டலைனா, உன் புருஷன் செத்து போவாரு என சொன்னான் என்று அழுத பெண், மேலும் நடந்த விஷயத்தை கணவரிடம் சொல்லுகையில் வீட்டின் முன்பு வந்து தன்னை அழைத்ததாகவும், அவன் முன் வந்து நின்றவுடன் தான் தனக்கு சிறிது நேரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சுயநினைவு இல்லாமல் மோதிரத்தை கழட்டி கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் முரளி மனோகர் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் ஹிப்னாடிசம் செய்து தங்க மோதிரங்களை பறித்து சென்ற புது வகையான மந்திர திருடனை கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆதாரங்களாக வைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களோ, முதியோர்களோ, மிக கவனமாக இருக்க வேண்டும், முன் பின் தெரியாத நபர்கள், வீட்டுக்கோ, அல்லது உறவினர்கள் என்று கூறி பேசினால் நம்ப வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?