உடல்நலக்குறைவால் மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் காலமானார் : அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்..!

12 September 2020, 7:03 pm
sudhangan-journalist - updatenews360
Quick Share

சென்னை : உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் இன்று காலமானார்.

பத்திரிக்கை துறைகளில் உள்ள மூத்த பத்திரிக்கையாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சுதாங்கன். பத்திரிக்கை துறையில் பல ஆண்டுகளாக நிலைத்திருந்த இவர், பல்வேறு செய்தி ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். மேலும், பல்வேறு தலைப்புகளினாலான விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு திறம்பட பேசியுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சுதாங்கன், சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.

அவரது மறைவிற்கு பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த பத்திரிகையாளர் திரு. சுதாங்கன் அவர்களது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, நடிகரும், இயக்குநமான மனோபாலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “One more shocking news…சே…என் உற்ற நண்பன்..hate this kind of situation .மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் காலமானார்! Journalist sudhangan passes away. RIP !!,” என தெரிவித்துள்ளார்.

Views: - 1

0

0