தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு

8 May 2021, 6:05 pm
k pichandi - updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் வரும் 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம்‌ தேர்தலில்‌ வெற்றி பெற்ற புதிய பேரவை உறுப்பினர்கள்‌ பேரவையில்‌ பதவியேற்றுக்‌ கொள்கின்றனர்‌. எனவே, உறுப்பினர்கள் தவறாமல் தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை எடுத்து வர வேண்டும்.

மேலும், 12ம்‌ தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர்‌, துணை சபாநாயகர்‌ தேர்தல்‌ நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டியை நியமனம் செய்து தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

Views: - 161

0

0