“கப்புச் சுப்புனு இருக்கும் சூர்யா- கலாய்க்கும் நெட்டிசன்கள்”!

Author:
20 June 2024, 7:47 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசின் மீது மக்களுக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்போ மருந்து பலதரப்பட்ட அரசியல்வாதிகளும் நடிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்று இறந்தது தெரிவித்திருக்கின்றனர் தற்போது நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகிறார். மேலும் பல்வேறு நடிகர்களும் தங்களது எக்ஸ் தளத்தில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மிகவும் பிரபலமான நடிகர் சூர்யா எந்த ஊரு அறிவிப்பையும் இரங்கலையும் தெரிவிக்கவில்லை என்று நெட்டிசைன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

குறிப்பாக அதிமுகவினர் ஆசிரியர் இருந்த பொழுது அவர்கள் செய்யும் தவறு சுட்டிக்காட்டி நிறைய பதிவுகளை தனது எக்ஸ் பக்கத்தில் சூர்யா வெளியிட்டுள்ளார் ஆனால் தற்போது கப்பு சுப்புன்னு இருக்கிறார் என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?