“கள்ளச்சாராயத்தில் கெட்டுப்போன மெத்தனால் கலப்பு”- சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Author:
21 June 2024, 1:58 pm

கள்ளக்குறிச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஓய்ந்த பாடில்லை. கள்ளச்சாராயம் மருந்து இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரம் தற்போது சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக கண்ணு குட்டி என்ற கோவிந்தராஜன், அவரது மனைவி விஜயா, சின்னத்துரை ஆகியோர் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு அவர்களிடம் சிபிசிஐடி யினர் தற்போது முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். கடந்த 17ம் தேதி ஆந்திராவிலிருந்து மாதேஷ் என்பவரிடமிருந்து தொழிற்சாலைகளில் காலாவதியான மெத்தனாலை சின்னத்துறை வாங்கியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சின்னதுறையிடமிருந்து 90 லிட்டர் மெத்தனால் மற்றும் 100 சிறிய மெத்தனால் பாக்கெட்டுகளை கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் வாங்கியுள்ளார். கண்ணுக்குட்டியின் சகோதரர் தாமோதரன் மெத்தனாலை குடித்துப் பார்த்து இது கெட்டுப் போய்விட்டது என்று கூறியுள்ளார்.அதற்கு சின்னத்துறை உயர்தர சரக்கு அப்படித்தான் இருக்கும் என்று கூறி விற்பனை செய்துள்ளார்.

எப்போதும் சின்னதுரை முழு பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் மெத்தனாலை விற்பனை செய்வாராம். ஆனால் இந்த முறை முன் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு மெத்தனாலை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆந்திராவில் செயல்படாத ரசாயன நிறுவனங்களில் இருந்து இந்த மெத்தனாலை மாதேஷ் என்பவர் கொண்டு வந்து சின்னத்துரையிடம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. சின்னத்திரை அளித்த தகவலின் பெயரில் புதுச்சேரி சேர்ந்த மாதேஷ் என்பவரையும், சின்னத்துரையின் நண்பர்களான ஜோசப் ராஜா, பாண்டிச்சேரி சேர்ந்த மதன்குமார் ஆகிய நபர்களை சிபிசிஐடியுங்கள். கைது செய்துள்ளனர் மேலும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரும்போது இத்தனை செக்போஸ்ட்கள் இருந்தும் எப்படி மெத்தனால் கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும், மாதேஷ் என்பவரிடமும்,மற்ற குற்றவாளிகளிடமும் இன்னும் தீவிர விசாரணை நடத்திய பிறகு தான் நிறைய தகவல்களை பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!