புதிய அரசு மருத்துவக் கல்லூரி.! முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.!!

4 July 2020, 1:05 pm
Medical College -Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் கிராம எல்லையில் 20.58 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ 381. 76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கென புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு அதன்படி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, மருத்துவ கல்லூரி முதல்வர் முருகேசன், செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கனவான மருத்துவகல்லூரி கனவு இன்று நனவாகி உள்ளது. ஏனென்றால் இதற்கு முன்பு விபத்து மற்றும் அவசர மேல் சிகிச்சைகளுக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 82 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் செல்வதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. இந்நிலை மாற கள்ளக்குறிச்சி யிலேயே மருத்துவ கல்லூரி அமைத்து தந்ததற்கு அப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கின்றனர்.