பிரச்சாரத்தை திடிரென நிறுத்திய கமல்ஹாசன் : டிவிட்டரில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

17 January 2021, 9:38 pm
Kamal- Updatenews360
Quick Share

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுகவை அடுத்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சீரமைப்போம் தமிழகத்தை எனும் தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சில ஆண்டுக்கு முன் நடந்த விபத்தில் காலில் அறுவை சிகிக்சை செய்ததின் தொடர்ச்சியாக மேலும் ஒரு அறுவை செய்ய வேண்டியுள்ளதால் தற்காலிக ஓய்வு பெறுதாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் மருத்துவர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாகவும், ஓய்வுக்கு பின் மீண்டும் தனது பணியை துவங்குவேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும், இணையம் வழியாக வீடியோக்கள் வரியாக பேசுவேன் எனவும் தான் வெளியிட்டடுள்ள அறிக்கையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Views: - 5

0

0