‘மக்கள் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுங்க‘ : நாளை துவங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து கமல்ஹாசன் அறிவுரை!!

20 June 2021, 7:16 pm
Kamal Stalin - Updatenews360
Quick Share

நாளை நடைபெறவுள்ள 16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

தமிழகத்தின் 16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள்,பேரவை செயலக ஊழியர்கள் உள்ளிட்டோர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை முதல் துவங்குகிறது. மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தந்து, அனைத்து அரசியல் தரப்புகளுக்கும் சமவாய்ப்பளித்து, ஆரோக்கியமான விவாதங்கள் நிகழச்செய்யவும், பேரவையின் மாண்பை நிலைபெறச் செய்யவும் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.

Views: - 97

0

0