‘மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம்’ : தனது ஸ்டெயிலில் தீபாவளி வாழ்த்துக் கூறிய நம்மவர்..!!!

13 November 2020, 2:43 pm
Quick Share

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நிதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துச் செய்தியை கூறியுள்ளார். அதில், “பெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான். அன்றாடம் வாழ்வைக் கொண்டாடுவோம். அன்பைத் தொற்ற வைப்போம். இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம். வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம். மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 26

0

0