மக்கள் நீதி மய்யத்தின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு : கூட்டணியா..? தனித்துப் போட்டியா…? விரைவில் அறிவிப்பு..!

Author: Babu
16 October 2020, 5:31 pm
Kamal Cover
Quick Share

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சார்பில் முக ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 7ம் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாக களம் காண உள்ளது. இதையொட்டி, சென்னை பாண்டிபஜார் தனியார் நட்சத்திர விடுதியில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க கமல்ஹாசனுக்கு முழு அதிகாரம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தேர்தல் நிதியை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள், கட்சியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு, சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதா..? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா..? என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

Views: - 40

0

0