அற்புதத்தாயின் 30 ஆண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்…? கமல்ஹாசன் வேதனை…!!

12 June 2021, 5:32 pm
kamal - arputhammal - updatenews360
Quick Share

சென்னை : பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான சட்டப்போராட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை மருத்துவ காரணங்களுக்காக அவரது தாய் அற்புதம்மாள் அவரை பரோலில் விடுவிக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ஆம் தேதி 30 நாட்கள் சாதாரண விடுப்பில் செல்வதற்கு உத்தரவிட்டிருந்த நிலையில் மருத்துவ பரிசோதனைகள் அறிக்கைகள் உரிய ஆணைகள் சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த மே 28ம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலினும் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், தன் மகனை விடுதலை செய்ய சட்டப்போராட்டம் நடத்தி வரும் அற்புதம்மாளின் முயற்சி எப்போது கைகூடப்போகிறதோ…? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?,” எனக் கூறியுள்ளார்.

Views: - 198

0

0