ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி ரத்த வெள்ளத்தில் சரிந்த 13 வயது சிறுமி… சிகிச்சை பலனின்றி பலி ; சுவாமி ஊர்வலத்தின் போது நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
14 March 2023, 2:55 pm

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே கிராம கோவில் திருவிழாவின் போது அம்மனுடன் மாட்டு வண்டியில் வந்த ஜெனரேட்டரில் 13 வயது பள்ளி மாணவியின் தலைமுடி சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் காண்டீபன் லதா தம்பதிகள். இவர்களுக்கு மூன்று பெண்கள் அனைவரும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊரில் வசித்து வருகின்றன.
15 வருடம் முன்பு காண்டீபனின் மூன்றாம் மகளை சென்னையில் டிஷ் ஆண்டெனா தொழில் செய்யும் சரவணன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். சரவணன் தம்பதிகளுக்கு லாவண்யா வயது 13 , புவனேஷ் வயது 9 ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர் இந்நிலையில் நான்கு வருடம் முன்பு சரவணனின் மனைவி இறந்துவிட்டார்.

அதனால் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் விச்சந்தாங்கல் பகுதியில் உள்ள மாமனார், மாமியார் வீட்டின் பராமரிப்பில் விட்டுள்ளார். தன்னுடைய தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வரும் லாவண்யா மற்றும் புவனேஷ் ஆகிய இருவரும் களக்காட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு, மற்றும் நான்காம் வகுப்பு என படித்து வருகின்றார். லாவண்யா படிப்பில் மிகவும் சுட்டிப்பெண் எனவும் அப்துல் கலாம் விருது உள்ளிட்ட பல விருதுகள் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு விச்சந்தாங்கல் கிராமத்தில் அங்காளம்மன் கோவிலின் கடைசி நாள் விழா நடைபெற்றது .மாட்டு வண்டியில் வைத்து சாமி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது, மாட்டு வண்டியின் பின்புறம் வண்ண விளக்குகள் ஒளிர்வதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது.

மாட்டு வண்டியில் அம்மன் அலங்காரத்துக்கு பின்னர் ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் லாவண்யா மற்ற சிறுவர்களுடன் ஏறி அமைந்துள்ளார். அப்பொழுது அங்கிருந்த ஜெனரேட்டரில் சுற்றிக் கொண்டிருந்த பெரிய பேனில் லாவண்யாவின் தலைமுடி சிக்கிக்கொண்டது. கடகடவென ஜெனரேட்டர் ஃபேன் சுற்றிய வேகத்தில் லாவண்யாவும் சுழல ஆரம்பித்தார். எதிர்பாராத இந்த விபத்தில் செமி லாவண்யாவின் அனைத்து தலைமுடிகளும் மண்டையில் இருந்து பிரித்துக் கொண்டு ஃபேனில் சுற்றியது. தலையிலிருந்து ஒரு முடியை பிடுங்கினாலே எவ்வளவு வலிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தலைமுடி அனைத்தும் ஜெனரேட்டர் பேனில் சுற்றி சுற்றி வந்து சிறுமி லாவண்யாவின் மண்டையை விட்டு பிரித்துக் கொண்டு வந்ததில் படுகாயம் அடைந்த லாவண்யா மயக்கமுற்று கீழே விழுந்தார். லாவண்யாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி லாவண்யா பரிதாபமாக உயரிழந்தார்.

லாவண்யாவின் மரணம் கேள்விப்பட்ட தாத்தா, பாட்டி உள்ளிட்ட அனைவரும் கதறி அழுதனர். லாவண்யாவின் தம்பி புவனேஷ் தன்னுடைய பாட்டியை அழுவாத பாட்டி ,அழுவாத பாட்டி, என் மடியில் சாய்ந்துகோ அழுவாத பாட்டி என மழலைமொழியில் கெஞ்சியதை கண்ட உறவினர்கள் தேம்பித் தேம்பி அழுதனர். இந்த விபத்து தொடர்பாக ஜெனரேட்டர் வாடகை விடும் முனுசாமி என்பவரை காவல்துறையினர் கைது ஸ்டேஷன் பெய்லில் விட்டனர்.

பொதுவாகவே கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெறும் போது அசம்பாவிதம் ஏதும் நடக்காத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்புக்கு உடன் செல்வது வழக்கம். நேற்று நடைபெற்ற திருவிழாவில் காவலர்கள் இல்லாததும் இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஓய்வு பெற்ற ஒரு காவலர் கூறும்போது, என்னுடைய பணியின் காலத்தில் ஒரு அழகான சிறுமியின் தலையில் உள்ள அனைத்து முடிகளும் பிடுங்கிக் கொண்டு வருவதை நான் கேள்விப்பட்டதே இல்லை .இதுதான் முதல் முறை என மிகவும் கண்கலங்க கூறினார். எனவே இது போன்ற திருவிழாக்கள் மற்றும் ஜெனரேட்டர் செல்லும் போது மிகவும் பாதுகாப்பான முறையில் எடுத்த செல்ல வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் வேதனையுடன் கூறினர்.

செல்வி லாவண்யாவின் மரணம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆக்கியது மிகுந்த சோகத்தை உண்டாக்கியது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!