வேகவைத்த முட்டைகள் தான் இந்தி நடிகர்களின் குழந்தைகள்.. சர்ச்சையை கிளப்பிய கங்கனா ராவத்.. !

Author: Rajesh
17 May 2022, 12:47 pm

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். தனது கருத்துக்களால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதில் பெயர் போன இவர் தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் பாலிவுட் திரையுலகை பற்றி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். தென் இந்திய நடிகர்கள் தங்கள் ரசிகர்கள் உடன் இணைந்து இருக்கும் விதத்தை கங்கனா பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ” தென்னிந்திய சினிமாவில் நடிகர்கள் தங்கள் ரசிகர்களுடன் இணைந்து இருக்கும் விதம் மிகவும் வலுவானது. ரசிகர் என்பதை தாண்டி அவர்களின் இணைப்பு அதை விட அதிகம். அதே நேரத்தில் இங்குள்ள நட்சத்திரங்களின் குழந்தைகள் படிப்பை முடிக்க வெளிநாடு செல்கிறார்கள்.

அவர்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் இங்குள்ள மக்களுடன் எவ்வாறு இணைவார்கள்? அவர்கள் “வேகவைத்த முட்டைகளைப்” போல தெரிகிறார்கள். அவர்களின் முழு தோற்றமும் மாறிவிட்டது. பின்னர் அவர்கள் நடிக்க வந்தால் எவ்வாறு அவர்களால் மக்களுடன் தொடர்பு கொள்ள முடியும். நான் யாரையும் கிண்டல் செய்ய விரும்பவில்லை, ”என கங்கனா தெரிவித்தார்.

பாலிவுட் திரையுலகில் “நெபோடிசத்திற்கு” எதிராக கங்கனா ஏற்கனவே பலமுறை பேசி கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் மீண்டும் அவர் ” நெபோடிசம்” குறித்து பேசியுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?